ஜனாதிபதித் தேர்தலின்போது, சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த தரப்பினர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ள கூட்டணி மற்றும் சின்னம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தி வந்தனர்.
கொழும்பு, பளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்திலேயே இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன.
இதன்போது, பொதுச் சின்னமாக எரிவாயு சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியை, புதிய ஜனநாயக முன்னணி கோரியிருந்தது.
இதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ள நிலையிலேயே, புதிய ஜனநாயக முன்னணியாக எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் களமிறங்க, இந்தத் தரப்பினர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தரப்பினர் உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்த தரப்பினர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணியின் கீழே களமிறங்கவுள்ளனர்.
இதுதொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேடக் கூட்டம் ஒன்றும் இன்று பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று சிறிகொத்த கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் கெஸ்பேவை தொகுதி அமைப்பாளர் உபுல் மலேவன தலைமையிலான குழுவினரே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியானது, எஞ்சியிருக்கும் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பல தலைவர்களை இழக்கக்கூடும் என்றும் இவர்கள்…
ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய தரப்பினர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஒரே கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பாக இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதனிடையே கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில்…
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு சம்பந்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (02) பிற்பகல் கொழும்பு மல் வீதியில் அமைந்துள்ள தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடியிருந்தனர். இதன்போதே இந்த தீர்மானம்…