புதன்கிழமை (09) பிற்பகுதியில் காலமான இந்திய தொழில் அதிபரும், தொலைநோக்குப் பார்வையாளருமான ரத்தன் டாடாவுக்கு மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்டிரா அரசு, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை செய்யவுள்ளது.
இந்த தகவலை தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தொழிலதிபருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநிலத்தில் வியாழக்கிழமை (10) துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார்.
இறந்த தொழிலதிபரின் உடல், மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை தெற்கு மும்பையின் நாரிமன் பாயிண்டில் உள்ள தேசிய கலை நிகழ்ச்சிகளுக்கான மையத்திற்கு (NCPA) கொண்டு செல்லப்படும் என்று ரத்தன் டாடாவின் குடும்பத்தினர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்குகள் வொர்லி மயானத்தில் மாலை 4:30 மணிக்கு இந்திய நேரப்படி நடைபெறும்.
இதில் இந்திய அரசின் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ளவுள்ளார்.