மலாகாவில் அடுத்த மாதம் நடைபெறும் டேவிஸ் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பிறகு தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறப் போவதாக ரஃபேல் நடால் (Rafael Nadal) உறுதிப்படுத்தியுள்ளார்.
டேவிஸ் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின், நெதர்லாந்தை எதிர்கொள்கிறது, அதுவே மைதானத்தில் நடாலின் இறுதி ஆட்டமாக இருக்கும்.
வியாழன் அன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோ செய்தி மூலம் நடால் தனது முடிவை அறிவித்தார்.
அதில் பல காயங்களுக்கு ஆளானதால் கடந்த சில வருடங்கள் தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாக கூறினார்.
தனது சர்வதேச புகழ்பூத்த டென்னிஸ் வாழ்க்கையில் நடால், 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.
ஒட்டுமொத்தமாக, ரஃபேல் நடால் தனது 18 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுகளில் 92 பட்டங்களையும் இரட்டையர் பிரிவில் 11 பட்டங்களையும் வென்றுள்ளார்.