இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளுக்குக் கிடைக்கும் ஆடை உற்பத்திகளுக்கான கட்டளைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
பங்களாதேஷில் நிலவும் மோதல்களும், அந்த நாட்டின் அரசியல் ஸ்திரமின்மையுமே இலங்கைக்கு ஆடை உற்பத்திகளுக்கான கட்டளைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக ஐக்கிய ஆடைகள் தொழிற்துறை சங்கங்களினது ஒன்றியத்தின் உப தலைவர் பீலிக்ஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.