இந்த மாத தொடக்கத்தில் ஈரானில் இருந்து ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு அதன் வான் பாதுகாப்பை வலுப்படுத்த இஸ்ரேலுக்கு உயர் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மற்றும் அமெரிக்க இராணுவக் குழுவை அனுப்புவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான உத்தரவினை ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கியுள்ளதாகவும் பென்டகன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் விநியோகம், ஒரு முழுமையான போரைத் தவிர்ப்பதற்கான பரவலான இராஜதந்திர முயற்சிகள் இருந்தபோதிலும், மத்திய கிழக்கில் மோதலை மேலும் தூண்டிவிடும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
ஒக்டோபர் 1 ஆம் திகதி ஈரான் சுமார் 200 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியது.
பெரும்பாலானவை இடைமறித்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது, ஆனால் சில ஏவுகணைகள் மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலைத் தாக்கியது.
இந்த தாக்குதலுக்கு எவ்வாறு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் இதுவரை கூறவில்லை.