அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கறுப்பின மக்களுக்கு அதிக பொருளாதார வாய்ப்புகள் மற்றும் பிற வாய்ப்புகளை வழங்குவதற்கான திட்டத்தை திங்களன்று (14) அறிவித்தார்.
இந்த திட்டங்களில் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகையுடன் கூடிய சிறு வணிகக் கடன்கள் மற்றும் பொழுதுபோக்கிற்காக கூட்டாட்சி மட்டத்தில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான வாக்குறுதி மற்றும் கறுப்பின தொழில்முனைவோர் புதிய தொழில்துறையில் அணுகலை உறுதிசெய்வது ஆகியவை அடங்கும்.
நவம்பர் 5 ஆம் திகதி தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்பை எதிர்கொள்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு கறுப்பின மக்களின் ஆதரவை பெறும் முயற்சியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அண்மைய கருத்துக்கணிப்புகளின்படி, 70 சதவீத கறுப்பின வாக்காளர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னரான கடந்த தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை 85 சதவீத கறுப்பின மக்கள் ஆதரித்திருந்தனர்.