சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம், ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் (ICC Hall of Fame) புதனன்று (16) புதிதாக மூன்று வீரர்களை சேர்த்துள்ளது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் அலஸ்டர் குக், தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் இந்திய வீராங்கனை நீது டேவிட் ஆகியோர் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் புதிதாக இணைந்து கொண்ட வீரர்கள் ஆவர்.
அலஸ்டர் குக்
161 டெஸ்ட் போட்டி – 45.35 சராசரியில் 12,472 ஓட்டங்கள், ஒரு விக்கெட்
92 ஒருநாள் போட்டி – 36.40 சராசரியில் 3,204 ஓட்டங்கள்
04 டி20 போட்டி – 15.25 சராசரியில் 61 ஓட்டங்கள்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் ஒருவரான இங்கிலாந்து நட்சத்திரம் அலிஸ்டர் குக் ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் ஒரு இடத்தை வெல்வதன் மூலம் தனது கிரிக்கெட் தொழில் வாழ்வை மேலும் மேம்படுத்தினார்.
போட்டியில் பொறுமை, நுட்பம் மற்றும் அசைக்க முடியாத கவனம் ஆகியவற்றால் நன்கு அறியப்பட்ட குக்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை 12 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.
இதன் போது அவர் ஒரு டெஸ்ட் தொடக்க வீரராக நிலைத்தன்மையை மறுவரையறை செய்தார் மற்றும் ஏராளமான சாதனைகளை முறியடித்தார்.
சிறந்த தலைமைத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட குக், பல ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு தலைவராக இருந்தார், வெளிநாடுகளில் குறிப்பிடத்தக்க தொடர் வெற்றிகளுக்கும் வழிகாட்டினார்.
ஏபி டி வில்லியர்ஸ்
114 டெஸ்ட் போட்டி – 50.66 சராசரியில் 8,765 ஓட்டங்கள், 2 விக்கெட்
228 ஒருநாள் போட்டி – 53.50 சராசரியில் 9,577 ஓட்டங்கள், 7 விக்கெட்
78 டி20 போட்டி – 26.12 சராசரியில் 1,672 ஓட்டங்கள்
அனைத்து வகையான பந்துவீச்சாளர்களுக்கும் எதிராக முழு அளவிலான பதில் தாக்குதலுடன் மைதானத்தைச் சுற்றி ஓட்டம் எடுக்கக்கூடிய ஏபி டி வில்லியர்ஸ் நவீன விளையாட்டில் மிகவும் புதுமையான மற்றும் ஆபத்தான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராவார்.
இதனால், அவர் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் தகுதியான உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டி வில்லியர்ஸ் 14 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார், மூன்று வடிவங்களிலும் 20,000 க்கும் மேற்பட்ட சர்வதேச ஓட்டங்களை எடுத்தார், அதே நேரத்தில் விளையாட்டை சிறப்பாக ஆக்கிய சிறந்த களத்தடுப்பு வீரர்களில் ஒருவராக மதிக்கப்பட்டார்.
இதுவரை இல்லாத வேகமான ஆடவர் ஒருநாள் சதம், பல ஐசிசி ஆடவர் ஒருநாள் வீரர் விருதுகள்களை வென்றவர் டி வில்லியர்ஸ்.
2018 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வெளியேறிய டி வில்லியர்ஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் இரண்டிலும் 50க்கும் அதிகமான துடுப்பாட்ட சராசரியுடன் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தார்.
ஜாக் காலிஸிக்கு பின்னர் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20 ஆயிரம் ஓட்டங்களை கடந்த தென்னாப்பிரிக்க வீரராகவும் அவர் உள்ளார்.
நீது டேவிட்
10 டெஸ்ட் போட்டி – 18.90 சராசரியில் 41 விக்கெட்டுகள்
97 ஒருநாள் போட்டி – 16.34 சராசரியில் 141 விக்கெட்டுகள்
2023 ஆம் ஆண்டில் டயானா எடுல்ஜி இணைத்துக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்த இந்தியாவின் இரண்டாவது பெண் நீது டேவிட் ஆவார்.
தனது நாட்டிற்காக 100 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர் நீது டேவிட், 141 விக்கெட்டுகளுடன் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக இரண்டாவது அதிக விக்கெட் எடுத்தவர் ஆவார்.
மேலும் 100 ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்தியாவின் முதல் பெண் வீரரும் ஆவார்.
1995 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நீது டேவிட் 53 ஓட்டங்களுக்கு 08 விக்கெட்டுகளை எடுத்தது புகழ்பெற்ற அவரது கிரிக்கெட் வழ்க்கையில் பிரபலமானது.