சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியானது, 2025 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சீசனுக்கு முன்னதாக தங்கள் வீரர்களை தக்கவைத்துக் கொள்வதை இறுதி செய்து வருகிறது.
ESPNcricinfo தகவல்களின்படி, தென்னாப்பிரிக்க பவர்-ஹிட்டர் ஹென்ரிச் கிளாசென், அவுஸ்திரேலிய சகலதுறை வீரரும் அணித் தலைவருமான பேட் கம்மின்ஸ் மற்றும் இந்திய சகலதுறை வீரர் அபிஷேக் சர்மா ஆகியோரை அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா பவர்-ஹிட்டர் ஹென்ரிச் கிளாசென் ஐபிஎல் 2025 க்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள உள்ளார்.
முதல் தக்கவைக்கப்பட்ட வீரராக கிளாசென் 23 கோடி இந்திய ரூபாவுக்கு (சுமார் 2.74 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) தக்க வைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
பேட் கம்மின்ஸ் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் முறையே 18 கோடி மற்றும் 14 கோடி இந்திய ரூபாவுக்காக அணியில் தக்க வைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேநேரம், டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரின் தக்கவைப்பை சன்ரைசர்ஸ் விரைவில் உறுதிப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் ESPNcricinfo தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பதற்கான காலக்கெடு ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு வழிநடத்திய பேட் கம்மின்ஸ், 2025 சீசனிலும் கேப்டனாக நீடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.