மலேசியாவில் இருந்து சென்னைக்கு, விமானத்தின் மூலம் அபூர்வ பச்சோந்திகள் மற்றும் கருங்குரங்குகளைக் கடத்தி வந்த குற்றச் சாட்டில் மலேசியப் பெண் பயணி உள்ளிட்ட இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் தனியார் பயணிகள் விமானத்தில் வந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பயணிகள் கொண்டுவந்த கூடைக்குள் இருந்து 52 உயிருள்ள பச்சோந்திகள் மற்றும் 4 ஆபிரிக்கக் குரங்குகள் கைப்பற்ப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.