கடந்த 16 ஆம் திகதி கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு முன்பாக நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 45 மற்றும் 50 வயதுடைய கொழும்பு 10, 15 ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களாவர்.
மேற்படி சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது உயிரிழந்த நபருடன் முச்சக்கரவண்டியில் பயணித்த ஏனைய இருவர் ஆவர்.
இவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கொலைக்கு உடந்தையாக செயற்பட்டதாக தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.