அடுத்த 48 மணி நேரத்தில் நில்வலா கங்கையைச் சுற்றியுள்ள தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலையால், நில்வலா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினை கருத்திற் கொண்டு இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.