அரசியல் வரப்பிரசாதங்களுக்காக அன்றி ஊழலற்ற அரசியலை முன்னெடுப்பதற்காகவே பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ளதாக ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் கம்பஹா மாவட்ட வேட்பாளர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ரஞ்சன் ராமநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஊழல்வாதிகளினாலேயே இந்த நாடு வீணடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளது. பலர் இந்த பட்டியலில் இருப்பார்கள் என்றே நம்புகின்றோம்.
அரசியல்வாதிகள் தங்களின் கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றாமையினாலேயே நாங்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டிஏற்பட்டது.
நாடாளுமன்ற வரப்பிரசாதங்கள் தொடர்பாக நாடாளுமன்றில முதலில் குரல் எழுப்பியது நானே.நான் அரசியல்வரப்பிரசாதங்களை பயன்படுத்தியதில்லை. 3 தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகித்தேன். ராஜாங்க அமைச்சராக பிரதியமைச்சராகவும் பதவிவகித்தேன்.
இம்முறை தேர்தலில் முன்னிலையாகியுள்ளோம் அரசியல்வரப்பிரசாதங்களுக்காக அன்றி ஊழலற்ற அரசியலை முன்னெடுப்பதற்காகவே தேர்தலில் களமிறங்கியுள்ளேன்” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.