வெப்பமண்டல புயல் காரணமாக பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக குறைந்தது 26 பேர் உயிரிந்துள்ளனர்.
இவற்றில் பெரும்பாலான இறப்புகள் பிகோல் பகுதியில் பதிவாகியுள்ளன.
அங்கு திடீர் வெள்ளம் நாகா நகரத்தை மூழ்கடித்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிராமி புயல் புதன்கிழமை (23) பிலிப்பைன்ஸின் வடகிழக்கில் தாக்கியது மற்றும் பல பகுதிகளை நீரில் மூழ்கடித்தது.
புயல், தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்தபோது மணிக்கு 95 கிமீ வேகத்தில் காற்று வீசியதாகவும் அதிகாரிகள் கூறினர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பிலிப்பைன்ஸில் 150,000 க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
புயல் காரணமாக நாடு முழுவதும் குறைந்தது பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக பிலிப்பைன்ஸ் விமான நிறுவனம் வியாழக்கிழமை (24) தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் பொதுவாக ஆண்டுதோறும் சராசரியாக 20 வெப்பமண்டல புயல்களை பதிவு செய்கிறது.
இவை பெரும்பாலும் கனமழை, பலத்த காற்று மற்றும் கொடிய நிலச்சரிவுகளை அங்கு ஏற்படுத்துகின்றன.