எதிர் வரும் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸுக்கும் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பிற்கும் இடையில் பலத்த போட்டி நிலவி வருகின்றது.
இந்நிலையில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பில் கிளின்டனும், பராக் ஒபாமாவும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் அரிசோனா மாநிலத்தில் பிரச்சாரம் செய்த கிளின்டன்,கமலா ஹாரிஸ் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர் எனவும், அவருக்கு அமெரிக்க மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ட்ரம்ப் அமெரிக்கர்கள் மத்தியில் புலம்பெயர்ந்தவர்கள் மீது அச்ச உணர்வை உருவாக்க முயற்சி செய்து வருகின்றார் எனவும் குற்றம் சுமத்தினார்.
நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அரிசோனா, மிச்சிகன் உட்பட 7 மாகாணங்களைச் சேர்ந்த 16 லட்சம் அமெரிக்கர்கள் வெளிநாடுகளிலிருந்து தபால் மூலம் வாக்களிக்க உள்ளதாகவும், தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அவர்கள் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.