லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேலின் செயற்பாடு குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த போரினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட இமானுவேல் மேக்ரோன், இப்போரானது விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள லெபனானுக்கு பிரான்ஸ் சார்பில் சுமார் 500 மில்லியன் யூரோக்கள் வழங்கப்படும் எனவும் இமானுவேல் மேக்ரோன் அறிவித்துள்ளார்.