கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த டிக்கிரி மெனிகே ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் பாடசாலை முடித்துக் கொண்டு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்காக கொழும்பு கோட்டை நோக்கி வந்த நிலையில் தெமட்டகொட புகையிரத வீதிக்கு அருகில் குறித்த மாணவன் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமடகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















