அரச விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் (AMS) பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இந்த சந்திப்பில் அரச விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.டீ.கே.எஸ்.யசவர்தன, செயலாளர் ஞானசேகரம் உள்ளிட்ட அரச விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.