இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா செயத் அலி கமேனி (Ayatollah Seyyed Ali Khamenei), இஸ்ரேலின் சனிக்கிழமை (26) தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று சூசகமாகத் தெரிவித்தார்.
அத்துடன், ஈரானின் சக்தியையும் உறுதியையும் இஸ்ரேலை உணரச் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் இராணுவ வீரர்களின் குடும்பங்களுடன் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற சந்திப்பின் போது உரையாற்றிய அவர்,
ஈரானிய தேசத்தின் இந்த சக்தியையும் உறுதியையும் சியோனிச (யூத தேசிய இயக்கம்) ஆட்சிக்கு எவ்வாறு தெரிவிப்பது என்பது நமது அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும்.
இஸ்ரேலின் தீய செயலை மிகைப்படுத்தப்படவோ அல்லது குறைத்து மதிப்பிடப்படவோ கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
இஸ்ரேலிய போர் விமானங்கள் சனிக்கிழமை அதிகாலை ஈராக்கின் வான்வெளியில் இருந்து ஈரானின் பாதுகாப்பு ரேடார்களை நோக்கி நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசியது.
தாக்குதல்களில் பெரும்பாலானவை முறியடிக்கப்பட்டன.
எனினும், இதன்போது ஈரான் இராணுவத்தில் பணியாற்றிய நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பிரஜை ஒருவர் உயிரிழந்திருந்தார்.
ஒக்டோபர் 1 ஆம் திகதி சுமார் 200 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவியதற்கு பதில் தாக்குதல் இதுவென இஸ்ரேல் கூறியுள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெளி வந்துள்ள அயதுல்லா காமேனியின் கருத்துக்கள், காசாவில் சியோனிச ஆட்சி செய்த கொடூரமான அட்டூழியங்களை கண்டித்து, பத்தாயிரம் குழந்தைகள்/சிறுவர்கள் மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களின் தியாகத்தை மிகக் கொடூரமான போர்க்குற்றங்களின் அடையாளமாக எடுத்துக் காட்டியது.