பலமான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றில் நுழைவற்கான அடித்தளத்தை எமது கட்சி இட்டுள்ளது” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் காலி மாவட்ட வேட்பாளர் மகேஷி மதுசங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பலமான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றில் நுழைவற்கான அடித்தளத்தை எமது கட்சி இட்டுள்ளது. திருடனைப் பார்த்து திருடன் என தைரியமாக கூறிய எமது தலைவரான ரஞ்சன் ராமநாயக்கவின் அரசியல் வருகையையிட்டு, நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
உண்மையை பேச இப்படியான ஒரு தலைவன் நாட்டுக்கு தேவைப்படுகிறார்.
நாம் பலமானதொரு எதிர்க்கட்சியாக அமர்வதற்கும் இப்படியான தலைவனின் தேவை அவசியமாகிறது.
எமது அணியில் இளைஞர்கள் பலர் அங்கத்துவம் பெற்றுள்ளார்கள். மக்களின் சரியான பிரச்சினையை இணங்கண்டு, அந்தப் பிரச்சினையை தீர்க்க எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நாம் நம்புகிறோம்.
நாடாளுமன்றுக்கு அதிகமாக பெண் பிரதிநிதிகள் வர வேண்டும். அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுவதோடு, அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க பலமானதொரு எதிர்க்கட்சியொன்று தேவையாகும்.
எமது கட்சி பலருக்கும் இன்று சவாலாக மாறியுள்ளதால்தான், கட்சியின் முதலாவது மாநாட்டுக்கு எதிராக பலர் பல்வேறு கதைகளை ஊடகங்களில் தெரிவித்து வருகின்றார்கள்.
இவை அனைத்தும் பொய்யாகும். எனினும், எம்மைவிட இவர்கள் எமது கட்சியை பிரபல்யப்படுத்துவதையிட்டு உண்மையில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்” இவ்வாறு மகேஷி மதுசங்க தெரிவித்துள்ளார்.














