நடப்பு அரசாங்கத்தினை வீழ்த்த வேண்டிய தேவை தமக்குக் கிடையாது எனவும் அரசாங்கம் வீழ்ச்சியடையும் போது முழுநாடும் வீழ்ச்சியடையும் எனவும் ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நடப்பு அரசாங்கத்தினை வீழ்த்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஏனெனில் ஒரு அரசாங்கம் வீழ்ச்சியடையும் போது முழுநாடும் வீழ்ச்சியடையும். எனவே அவ்வாறான பொறுப்பற்ற செயல்களை நாம் ஒருபோதும் செய்யமாட்டோம்.
நாம் இந்த நாட்டில் முறைமை மாற்றத்தினையே எதிர்ப்பார்க்கின்றோம். உலகில் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட வேண்டும். அபிவிருத்தி அடைந்த நாடுகள் முன்னெடுத்திருந்த வேலைத்திட்டங்களை நாமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
நாம் நாட்டில் இனரீதியாக மதரீதியாக மொழிரீதியாக பிளவுபட்டவர்கள் அல்ல.நாம் மக்களின் உண்மையான தேவையறிந்து செயற்படுபவர்கள்.கடந்த அரசாங்கங்கள் பின்பற்றிய தவறான கொள்கைகள் காரணமாக நாடு வீழ்ச்சியடைந்தது ஆனால் அந்ததந்த அரசாங்க காலப்பகுதியிலும் முறைமைமாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
அவை அரசஆதரவு செல்வந்தர்களுக்கு சாதகமாக அமைந்தமையினாலேயே அவற்றில் எந்தபயனும் ஏற்படவில்லை.எனவே நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி அதிக பெரும்பான்மை ஆசனங்களை வெற்றிகொண்டு நாடாளுமன்றுக்கு செல்லும் பட்சத்தில் இந்த நாட்டில் அபிவிருத்தி யுகம் ஏற்படுத்தப்படும்” இவ்வாறு ரவி குமதேஷ் தெரிவித்துள்ளார்.
@athavannews அரசாங்கத்தினை வீழ்த்த வேண்டிய தேவை எமக்குக் கிடையாது!