2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆப்கானிஸ்தான் சகலதுறை வீரர் மொஹமட் நபி அறிவித்துள்ளார்.
எனினும், உலக கிரக்கெட் அரங்கில் ஆப்கானிஸ்தானின் எழுச்சிக்கு முக்கிய பங்காற்றிய நபி, டி20 சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்.
39 வயதான மொஹமட் நபியின் ஓய்வு முடிவை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி உறுதி செய்ததாக Cricbuzz இன் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
2009 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியுடன் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமான மொஹமட் நபி இதுவரை 165 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அதில் அவர், 27.30 சராசரியுடன் மொத்தமாக 3549 ஓட்டங்களையும், 171 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
2015 இல் நடந்த ஆப்கானிஸ்தானின் முதல் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியின் போ, அவர் தலைவராக இருந்து அணியை வழி நடத்தியிருந்தார்.