முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) தீர்மானித்துள்ளது.
மிரிஹான பகுதியில் உள்ள வீடொன்றில் பதிவு செய்யப்படாத கார் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ஷஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அன்றைய தினம், இந்த மனு தொடர்பான உண்மைகளை தெரிவிக்குமாறு சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.