ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்களன்று (11) பிரதமர் ஷிகெரு இஷிபாவை (Shigeru Ishiba) தலைவராகத் தொடர்ந்தும் செயற்பட ஆதரவாக வாக்களித்தனர்.
கடந்த மாதம் நடந்த கீழ்சபைத் தேர்தலில் ஷிகெரு இஷிபாவின் ஊழல் களங்கப்பட்ட கூட்டணி அதன் நாடாளுமன்றில் பெரும்பான்மையை இழந்த நிலையில் ஜப்பானிய சட்டமியற்றுபவர்களின் மேற்கண்ட முடிவு வந்துள்ளது.
சீனா மற்றும் வட கொரியாவுடன் பதட்டங்கள் அதிகரிக்கும் அதே வேளையில், ஜப்பானின் முக்கிய கூட்டாளியான அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்தைப் பெறவுள்ள நிலையில் 67 வயதான, இஷிபா தற்போது பலவீனமான சிறுபான்மை அரசாங்கத்தை வழிநடத்தும் சவாலை எதிர் நோக்கியுள்ளார்.
திரு இஷிபாவின் லிபரல் ஜனநாயகக் கட்சி (LDP) மற்றும் கூட்டணிக் கட்சியான Komeito கடந்த மாத பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை இழந்தது.
கீழ்சபைத் தேர்தலில் வெறும் 215 இடங்களை மாத்திரம் வென்ற இவர்கள், அரசாங்கத்தை அமைக்க தேவையான 233 இடங்களை வெல்லவில்லை.
2009 ஆம் ஆண்டிலிருந்து இருந்து, கடந்த 69 ஆண்டுகளில் 65 ஆண்டுகளாக ஜப்பானை ஆட்சி செய்த லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு இது மிக மோசமான விளைவு ஆகும்.