2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தன.
அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதியான காலம் அமுலில் இருக்கும்.
குறித்த காலப் பகுதியில் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் வேட்பாளர்கள், அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்களை இன்று நள்ளிரவுக்குப் பின்னர் அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இவ்வருட தேர்தல்களை கண்காணிப்பதற்காக சுமார் 6,000 பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்றை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.