”உரிமையாளர்கள் இல்லாத சுமார் 18 வாகனங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த வாகனங்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் வழங்கிய நிலையில், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மூலம் உரிமையாளர்கள் இல்லாத விடயம் தெரிய வந்துள்ளது.
மேலும் எதிர்காலத்தில் ஏனைய தரப்புக்களின் ஒத்துழைப்புடன் இந்த வாகனங்கள் தொடர்பிலான விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.