பாகிஸ்தானின் குர்ரம் (Kurram) மாவட்டத்தின் ஓசாட் பகுதியில் பயணிகள் வாகனங்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் மற்றும் சிறுவர்கள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பராச்சினாரிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற வாகனத் தொடரணி இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டது.
இந்த உயிரிழப்புகளுக்கு மேலதிகமாக மூன்று பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர் என்று பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வன்முறையானது, பிரதான மற்றும் இணைப்புச் சாலைகள் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையை மூடுவதற்கு வழிவகுத்தது.
குர்ரம் மாவட்டத்தில் உணவுப் பொருட்கள், மருந்துகள், பெட்ரோல் மற்றும் டீசல் இருப்புக்கள் ஆகியவற்றின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக, பிரதான மற்றும் இணைப்புச் சாலைகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால், பாரிய மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
மேலும், பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
செப்டம்பர் மாத மோதல்களில் 60 பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்கத்கது.