பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்ட சுந்தரலிங்கம் பீரதீப் அவர்களுக்கு இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான சுந்தரலிங்கம் பிரதீப், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டமை வாழ்த்துகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் மலையக மக்களின் காணி உரிமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிக கரிசனைக்காட்டி நில உரிமையினை பெற்றுக்கொடுக்க முக்கியத்துவம் வழங்குவார் என தான் நம்பிக்கை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்