இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலை நம்பி சேதமடைந்த பாலத்தின் மீது காரை செலுத்தி சென்றதில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அரைகுறையான நிலையில் சேதமடைந்த பாலத்தில் பயணித்த காரானது 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சோக சம்பவம் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது.
வாகன சாதிகள் ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக பரேலிக்குச் சென்றனர்.
திருமண மண்டபத்தை அடைய கூகுள் மேப்ஸை நம்பி சென்றுள்ளனர்.
அந்த ஜிபிஎஸ் மேப் அவர்களை உடைந்த மேம்பாலத்தின் மீது வழி காட்டியுள்ளது.
அதை நம்பி பாலத்தில் பயணித்த கார், 50 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் விழுந்ததுள்ளது.
விபத்து நடந்த போது போதிய சூரிய வெளிச்சம் இல்லை என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
சேதமடைந்த காரையும், இறந்து கிடந்த மூன்று பேரையும் உள்ளூர்வாசிகள் கண்டதாக ஆரம்பகட்ட விசாரணை தெரிவிக்கின்றது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை குற்றம் சாட்டினர்.
மேலும், பாலம் ஏன் முடிக்கப்படாமல் உள்ளது என்றும், கட்டமைப்பின் ஒரு முனையில் தடுப்புகள் எதுவும் நிறுவப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.
அலட்சியம் காட்டிய கட்டுமானத் துறை மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினர்.