லாகோஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண துணை பிராந்திய ஆப்பிரிக்க தகுதிகான் குழு சி போட்டியில் நைஜீரியாவுக்கு எதிராக வெறும் 07 ஓட்டங்களுக்குள் ஐவரி கோஸ்ட் அணி ஆட்டமிழந்தது.
ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அணி, ஒற்றை இலக்க ஓட்டத்துக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
முன்னதாக, கடந்த செப்டெம்பர் மாதம் மங்கோலியா சிங்கப்பூருக்கு எதிராக 10 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்திருந்தது.
அதேநேரம், ஐவரி கோஸ்ட்டுக்கு எதிராக நைஜீரிய அணியானது மேற்கண்ட போட்டியில் 264 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நைஜீரியா ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மூன்றாவது அணியாக மாறியது.
2023 செப்டம்பரில் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாளம் மங்கோலியாவுக்கு எதிராக 273 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
அதன்பின்னர், கடந்த மாதம் சிம்பாப்வே அணி, காம்பியாவை 290 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.