உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான இகா ஸ்வியாடெக் (Iga Swiatek) ஒரு மாத இடைநீக்கத்தை எதிர்கொண்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 12 அன்று போட்டிக்கு வெளியே நடந்த சோதனையில் ஆஞ்சினா மருந்தான ட்ரைமெட்டாசிடின் கொண்ட மாதிரியை வழங்கியபோது போலந்து வீராங்கனை உலகின் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தார்.
தூக்கப் பிரச்சினைக்காக போலந்தில் தயாரித்து விற்கப்படும் பரிந்துரைக்கப்படாத மருந்தை அவர் பயன்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாடு முகாமை (The International Tennis Integrity Agency) இத்தடையை வியாழன் (28) அன்று விதித்தது.
இது குறிப்பிடத்தக்க தவறு அல்லது அலட்சியம் இல்லை என்ற வரம்பின் மிகக் குறைந்த அளவில் அவளது தவறு நிலை கருதப்படுகிறது என ர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாடு முகாமை கூறியுள்ளது.
செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 4 வரை தற்காலிகமாக இகா ஸ்வியாடெக் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இவரது இடைநீக்கம் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இகா ஸ்வியாடெக் தவறவிட்ட மூன்று போட்டிகளும் தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் பயிற்சியாளரின் மாற்றம் காரணமாக இருந்தன என வெளிப்படுத்தப்பட்டன.
இதற்காக சின்சினாட்டி ஓபனின் அரையிறுதியை எட்டியதற்காக அவரது பரிசுத் தொகையை இழக்க நேரிடும்.