அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்ததால் நாற்பத்தி 6 ஆயிரத்து 766 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்படைந்துள்ளனர்
அத்துடன் குளாரான காலநிலை நிலவுவதால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
அத்துடன் கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததினால் நாற்பத்தி 6 ஆயிரத்து 766 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்டைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் சாமர ஜெயதிலக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் சூழல் நிலவுகின்றதால் குளிரான காலநிலை நிலவும் எனவும் இதன் போது சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கால் நடை உரிமையாளர்களும் கால நிலை தொடர்பில் கவனமாக செயற்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் முகமது அப்துல் காதர் முகமது ரியாஸ் குறிப்பிட்டுள்ளார்