இன்று (02) முதல் மலையக ரயில் பாதையூடான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 26 ஆம் திகதி உடுவர பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 7 ஆம் மைல் கம்பத்திற்கு அருகில் தண்டவாளங்கள் மண்ணில் புதையுண்டதில் 5 நாட்களாக மாலையக பாதையூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இன்று (02) முதல் மலையக ரயில் பாதையின் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.