டர்பனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்கா இலங்கையை 233 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பின்னர், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
அதேநேரம், இலங்கை தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு பின் நோக்கி நகர்ந்தது.
516 என்ற இலக்கினை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 282 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
தென்னாப்பிரிக்கா சார்பில் பந்து வீச்சில் மார்கோ ஜோன்சன் முதல் இன்னிங்ஸில் 13 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 74 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் அதிகபடியாக எடுத்தார்.
இந்த வெற்றியுடன் தென்னாப்பிரிக்கா 59.26 புள்ளிகளுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.