வர்த்தக நிலையங்களில் அரிசி, தேங்காய்,காய்கறிகள் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பெரும்பாலான இடங்களில் தேங்காய் ஒன்று 160 -முதல் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் காய்கறிகளின் விலைகளும் பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காய்கறிகள் மொத்தவிற்பனை நிலையங்களுக்கு வழங்கப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தவகையில் போஞ்சி கறிமிளகாய் வட்டக்காய் கத்தரிக்காய் கரட் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வர்த்தக நிலையங்களில் தொடர்ந்தும் அரிசிக்குத் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.