கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நான்கு பேரும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பாடசாலைகளில் கற்பிக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று ஆரம்பமான ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது
இதன்போது அங்கு வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளதுடன் சம்பவத்தின் போது இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது