தேர்தலின் பின்னர் தற்போதைய அரசாங்கம் பெருந்தோட்ட மக்களை கவனத்தில் கொள்ளவில்லை என ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஊடக பேச்சாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த ஆனந்த பாலித்த,
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுனில் ஹந்துனெத்தி, தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் 120 ரூபாவுக்கு ஒரு லீற்றர் பெற்றோலை விநியோகிப்பதாக குறிப்பிட்டார் எனவும் ஆனால் அதற்கான எந்த முயற்சியும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தமது கட்சி ஆட்சிக்கு வந்து ஓரிரு மாதங்களுக்கு பின்னர் துறைமுகத்துக்கு இறக்குமதி செய்யப்படும் போது நிர்ணயிக்கப்படும் விலைக்கு அமைவாகவே எரிபொருளின் விலை நிர்ணயிக்கப்படும் என சுனில் குறிப்பிட்டார் எனவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதும் எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை எனவும் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
மேலும் ”தேர்தல் பிரச்சாரங்களில் பேசுவதற்கும், அரச நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படும் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் ஆனந்த பாலித்த குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த அரசாங்கமும் மக்களை சுரண்டிப் பிழைக்கிறது எனவும், வாழ்க்கைச் செலவுகளை குறைப்பதாககுறிப்பிட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் தேர்தல் பிரச்சாரமாக மாற்றமடைந்துள்ளது எனவும், பெருந்தோட்ட மக்களை அரசாங்கம் கவனத்திற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாது எரிபொருள் இறக்குமதியின் போது, முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு சென்ற தரகுப்பணம், தற்போதைய அரசாங்கத்துக்கும் செல்வதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஊடக பேச்சாளர் ஆனந்த பாலித்த தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது எரிபொருள் இறக்குமதியின் போது, முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு சென்ற தரகுப்பணம், தற்போதைய அரசாங்கத்துக்கும் செல்வதாகவும், ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.