நாட்டில் இனவதாக செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்பதுடன் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தியேனும் இனவாதத்தினை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டனர்.இதன்போது குறிப்பாக சில மாணவர்கள் உயிரிழந்தனர்.பொதுமக்களின் உடைமைகள் சேதமடைந்தன.
அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசாங்கம் சார்பில் நான் இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன். அனர்த்தங்களில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் துரிதமாக மேற்கொண்டோம்.
அந்த பொறுப்பினை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டையே நாம் பொறுப்பேற்றுள்ளோம். உற்பத்தி பொருளாதாரத்துடன் முன்னோக்கி செல்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
விவசாயிகள் மீனவர்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம் வழங்க எதிர்ப்பார்த்துள்ளோம்.அரிசியை பொறிமுறை இருக்கவில்லை. விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்கான பொறிமுறை ஒன்று இருக்கவில்லை.அதனாலேயே அரிசி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் என்ற ரீதியில் அரியினை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அரிசியினை இறக்குமுதி செய்வதற்கு தனியாருக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது.அரசி தட்டுப்பாடு பிரச்சினையை அரசியல்மயப்படுத்துவதற்கு பலர் முயற்சிக்கின்றனர் அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.
நாம் இனவாத செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம்.புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தியேனும் இனவாதத்தினை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.