உலக இந்து அமைப்புகள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டமொன்று இன்றைய தினம் கொழும்பு 7 பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் முன்பாக நடைபெற்றது.
வங்கதேசத்தில் ஒடுக்கப்படும் இந்து சிறுபான்மை சமூகத்தின் துயர நிலையை வெளிக்கொண்டு வரும் விதமாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இவ்விடயத்தில் சர்வதேச தலையீட்டின் அவசியம் குறித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் வலியுறுத்தப்பட்டது.
மேலும் இவ் ஆர்ப்பாட்டத்தின் போது, வங்கதேச இந்து சமுதாயத்தின் பாதுகாப்பு, சமத்துவம், மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தில் முறைப்பாட்டு கடிதம் ஒன்றும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.