தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைமைகுழு கூட்டம் வவுனியா இரண்டாம்குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.
ரெலோதலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்டநகர்வு மற்றும், சமகாலஅரசியல் நிலவரங்கள், தொடர்பாக பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலந்துரையாடலில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரன், மற்றும் விந்தன்கனகரத்தினம்,பிரசன்னா இந்திரகுமார்,செ.மயூரன் , பேச்சாளர் சுரேன் குருசாமி உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.