ஐவரி கோஸ்ட் நாட்டின் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள ப்ரோகோவா என்ற கிராமத்தில் 2 மினி பஸ்கள் ஒன்றையொன்று வேகமாக மோதியதில் விபத்து ஏற்பட்டு இரண்டு பஸ்களும் தீப்பிடித்துள்ளன.
இதில் பஸ்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற முடியாமல் சிக்க விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐவரி கோஸ்ட்டில் பாழடைந்த சாலைகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.