சதொச விற்பனை நிலையங்கள் மூலம் தினசரி விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை (9) முதல் 200,000 ஆக அதிகரிக்கப்படும் என வர்த்தக, வணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் இருந்து பெறப்படும் தேங்காய்கள் கொழும்பு உட்பட நகர்ப்புறங்களை இலக்கு வைத்து சதொச விற்பனை நிலையங்கள் மூலமாக தலா 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
தற்போது சதொச நிறுவனம் நாளாந்தம் சுமார் 100,000 தேங்காய்களை விற்பனை செய்கிறது.
அண்மைக்காலமாக பெய்த கடும் மழையினால் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்ட இடையூறுகள் தற்போது தணிந்துள்ளதாக தெரிவித்த வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.