லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை இன்று முதல் 2 லட்சமாக அதிகரிக்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கொழும்பு தவிர்ந்த வெளிமாட்டங்களில், சதொச விற்பனை நிலையங்களில் அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாடு தொடர்வதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அதிக விலைக்கு அரிசியினை கொள்வனவு செய்வோரை கண்டறிவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சிறுமற்றும் நடுத்தர நெல் அலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் சுமார் ஒரு லட்சம் தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டது.
கொழும்பு உட்பட நகர்ப்புற பகுதிகளில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் தலா 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை சதொச ஊடாக நாடு அரிசி மற்றும் தேங்காய் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும் ஒரு சில சதொச நிறுவனங்களில் அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவந்துள்ளது.
அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் சதொச ஊடாக நுகர்வோர் தலா ஒரு கிலோகிராம் 220 ரூபா வீதம் ஐந்து கிலோ அரிசியையும், ஒரு தேங்காய் 130 ரூபா வீதம் மூன்று தேங்காய்களையும் ஒரே நேரத்தில் கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு தவிர்ந்த வெளிமாட்டங்களில் சதொச விற்பனை நிலையங்களில் அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாடு தொடர்வதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இந்த சலுகை கிடைக்கப்பெறவில்லை எனவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.