நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர நிலை இன்றும் சற்று சாதகமற்றதாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நாடு முழுவதும் காற்றின் தரம் 90 முதல் 180 வரை இருக்கலாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி யாழ் மற்றும் பொலன்னறுவை நகரங்களில் காற்றின் தர சுட்டெண் சாதகமற்ற மட்டத்தில் இருப்பதாகவும், பல பகுதிகளில் காற்றின் தர சுட்டெண் சாதகமற்ற நிலைக்கு உயரலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் தற்போதைய நிலவரப்படி நுவரெலியா, களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் மாத்திரம் மிதமான நிலையில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது