கொழும்பு, குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர் இன்றைய தினம் இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறையில் அடைத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.