சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் அல்ல என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோ ஆயராக நியமிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த தெளிவுபடுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையில் உத்தியோகபூர்வ அப்போஸ்தலிக்க வாரிசு இல்லாத ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் அல்ல என்று இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது போன்ற தகவல்களை நம்பி பொது மக்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் சபை வலியுறுத்தியுள்ளது.