இந்திய வானிலை ஆய்வு நிலையத்தின் தகவலின்படி (IMD), புது டெல்லியில் புதன்கிழமை (11) குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்த குளிர்கால பருவத்தில் தேசிய தலைநகரில் முந்தைய நாளின் வெப்ப நிலையான 8 டிகிரி செல்சியஸுடன் ஒப்பிடும்போது, புதன்கிழமை வெப்ப நிலை 4.9 டிகிரி செல்சியஸாகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே குறைந்தபட்ச வெப்பநிலை 4. 9 டிகிரி செல்சியஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதியும் பதிவாகியிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் சுட்டிக்காட்டியது.
டெல்லியின் சில பகுதிகளை பனிமூட்டம் மூடியதால், காலை 9.00 மணி வரை குளிர் நிலவியது. IMD இன் தகவலின்படி, புகை மூட்டம் மற்றும் மூடுபனி நிலைகள், வடமேற்கில் இருந்து 8-10 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்பரப்பு காற்றுடன் இணைந்து வீசியது வெப்பநிலை வீழ்ச்சிக்கு பங்களித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டெல்லியின் மிகக் குறைந்த அளவிலான வெப்ப நிலையானது கடந்த 1930 டிசம்பர் 27 ஆம் திகதியும் பதிவாகியிருந்தது.
இதற்கிடையில், புதன்கிழமை காலை டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவலின்படி, காலை 7 மணி நிலவரப்படி, டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) 209 ஆக இருந்தது.
ஒரு நாள் முன்தாக காற்றுத் தரக் குறியீடானது தேசிய தலைநகரில் 223 ஆக பதிவு செய்யப்பட்டது.
AQI வரம்புகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன:
* 0-50 (நல்லது)
* 51-100 (திருப்திகரமானது)
* 101-200 (மிதமானது)
* 201-300 (மோசமானது)
* 301-400 (மிகவும் மோசமானது)
* 401-500 (கடுமையானது)