2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று கேள்விகள் கசிந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று (11) ஒத்திவைத்துள்ளது.
இந்த மனுக்கள் இன்றைய தினம் உயர் நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, இவ் விடயத்தில் தீர்ப்பளிக்கத் தேவையான மூன்று பேர் கொண்ட உயர் நீதியரசர்கள் குழாம் அமைக்கப்படாதமையினால் விசாரணை டிசம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதியில் மூன்று கேள்விகள் முன்னதாகவே வெளியிடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் காரணமாக பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.