கெக்கிராவ – தம்புள்ளை வீதியில் மிரிஸ்கோனியா பகுதியில் நேற்று (11) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் சார்ஜன்ட் பயணித்த கெப் வாகனம், பயணிகள் போக்குவரத்து பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே உயிரிழந்தவர் ஆவார்.
உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் நேற்று (11) மாத்தளை மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக ஆஜராகி கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்கு திரும்பிச் செல்லும் வழியிலேயே விபத்துக்குள்ளானார்.
மேலும், விபத்தில் கெப் வண்டியின் சாரதியும் படுகாயமடைந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.