மெட்டியகொட, மஹவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மெட்டியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் (16) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு முச்சக்கர வண்டியில் வந்த சிலரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இதில், 49 வயதுடைய தந்தையும் 29 வயதுடைய அவரது மகளும் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
தந்தையின் வயிற்றிலும் மகளின் காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.