10 ஆவது நாடாளுமன்றின் நாடாளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது.
அந்தவகையில் இன்று அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் முதலில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பத்தாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.